Thursday, July 4, 2013

கொஞ்சமாவது ரகசியம் வேணுங்க!- நடிகர் விஜய்


சென்னை: மேக்கிங், புரமோஷன் என்ற பெயரில் சினிமாவின் அத்தனை விஷயங்களையும் வெளியில் விடுவது சரியல்ல,

 கொஞ்சமாவது ரகசியம் வேணும், என்று நடிகர் விஜய் கூறியுள்ளார். சமீபத்தில் ஆனந்த விகடன் பத்திரிகைக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், "சினிமா ரொம்ப எமோஷனல் மீடியம். ஒரு ரசிகன் தியேட்டருக்கு வந்தா, அவனை நாம தியேட்டர் சீட்ல உக்காரவைக்கக் கூடாது. கதை நடக்கும் களத்துக்கு... அந்த சூழ்நிலைக்கே கடத்திட்டுப் போயிடணும். அந்த அனுபவம்தான் சினிமாவின் மேஜிக்.

ஆனா இப்போ, 'மேக்கிங்', 'புரமோஷன்'னு படப்பிடிப்பு ரகசியங்களை ஜஸ்ட் லைக் தட் ஷேர் பண்ணிடுறாங்க. எம்.ஜி.ஆர், சிவாஜி காலத்துல அதையெல்லாம் ரகசியமா வெச்சிருப்பாங்க. ரசிகர்களும் தியேட்டர் ஸ்க்ரீன்ல அவங்க நடிக்கிறதைப் பார்த்துப் பிரமிச்சுக் கைத்தட்டுவாங்க. அப்படி ஒரு ரகசியத் திரை கொஞ்சமாவது இப்போ தேவை. 


ஷூட்டிங்கில் நாங்க கஷ்டப்பட்டு நடிக்கிறதை, 'மேக்கிங்'கிற பேர்ல ஓப்பனா எல்லாத்தையும் காமிச்சுட்டா, அப்புறம் அந்தக் காட்சியை தியேட்டர்ல பார்க்கிறப்போ எந்தத் த்ரில்லும் இருக்காது. 'இந்த சீனா? இதை எப்படி எடுத்தாங்கன்னு நான் நெட்லயே பார்த்துட்டேனே'னு அசால்ட்டா சொல்லிட்டுப் போயிடுவாங்க. அது சினிமாவுக்கு நல்லதில்லைங்ணா! மேஜிக்கை ஸ்க்ரீன்ல காட்டுவோம் வாங்கங்ணா!', என்று குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment