முதல் இன்னிங்சில் நயன்தாரா பிசியாக இருந்த நேரத்தில், அவருடன் ஒரு படத்திலாவது, ஜோடி சேர்ந்துவிட வேண்டும் என்று, துடியாய் துடித்தவர் ஆர்யா. அவரது ஆசையை, “பாஸ் என்கிற பாஸ்கரன் படம் மூலம் நிறைவேற்றி வைத்தார் இயக்குனர் ராஜேஷ்.
அதனால், அப்படத்தில் ஆர்யா – நயன்தாரா நடிப்பு, பேசும்படியாக இருந்தது. அதையடுத்து, “ராஜா ராணியில் மீண்டும் அவர்கள் இணைந்துள்ளனர். இதில், முந்தைய படத்தை விட, மிக நெருக்கமாக நடித்துள்ளனராம்.அதைப்பார்த்து, “மற்ற நடிகர்களை விட, ஆர்யாவுடன் மட்டும் அதிக நெருக்கமாக நடிப்பதேன் என்று நயன்தாராவைக் கேட்டால், “சினிமாவைப் பொறுத்தவரை எப்படி நடிக்க வேண்டும் என்பதை, கதை தான் முடிவு செய்கிறது. ஆர்யா எனக்கு நல்ல நண்பர்.
எங்களுக்கிடையே நல்ல புரிதல் உள்ளது. அதனால், நடிப்பிலும் எங்களையும் அறியாமல் அதிகம் நெருக்கம் வெளிப்படுகிறது என்கிறார்.
No comments:
Post a Comment