Tuesday, July 2, 2013

சிவ கார்த்திகேயனின் காமெடி ஆர்வம்

இயல்பாகவே, சிவ கார்த்திகேயனுக்கு நகைச்சுவை உணர்வு அதிகமாம். படிக்கிற காலத்தில் இருந்தே, நண்பர்கள் மத்தியில் அவ்வபோது காமெடி பட்டாசுகளை கொளுத்திப் போட்டு, அவர்களை சிரிக்க வைப்பது தான் அவரது பொழுதுபோக்காம்.சின்னத்திரையில் நிகழ்ச்சிப் தொகுப்பாளரான போதும், அதே ரூட்டை பின்பற்றி, “டிவி நேயர்களை சிரிக்க வைத்தார்.
தனுஷ் நடித்த, “3 படம் மூலம் சினிமாவிலும் காமெடியனாகவே நுழைந்தார். இப்போது ஹீரோ ஆன பின்னும், காமெடிக்கே முக்கியத்துவம் கொடுத்து வருகிறார். அவர் கூறுகையில், “என், ஒவ்வொரு படங்களிலும், காமெடி காட்சிகளில், என் பங்களிப்பை கூடுதலாக வெளிப்படுத்துகிறேன். டைரக்டர்களின் அனுமதியுடன், சில வசனங்களை மாற்றி வடிவமைக்கிறேன் என்கிறார்.


No comments:

Post a Comment