இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ், தான் அடுத்து இயக்கும் புதிய படத்துக்கு நடிகர்களைத் தேர்வு செய்து வருகிறார். நடிகர்கள் ஹீரோ போல் கட்டுமஸ்த்தான இஞைனராக இருக்க வேண்டியதில்லை. 65 முதல் 70 வயதான தாத்தாக்களாக இருந்தாலே போதும்.
கதையில் மிக முக்கியமான கதாபாத்திரத்திற்கு இரண்டு வயதானவர்கள் தேவை என்பதோடு, இதுவரை படங்களில் முகம் காட்டாத, புதியவராக இருக்க வேண்டும் என்பதால்தான் விளம்பரம் கொடுத்து தாத்தாக்களைத் தேடி வருகிறார்.
அப்படியிருந்தும், எந்த மாதிரியான கதையாக இருக்கும் என்று யாராலும் கணிக்க முடியாததே ஏ.ஆர்.முருகதாஸின் ஸ்டையில். ஆக, நடிக்க ஆர்வமுள்ளவர்கள் முருகதாஸுக்கு தங்களின் புகைப் படங்களை அனுப்பி வைக்கலாம்.
No comments:
Post a Comment