கவுதம் மேனன் கடைசியாக இயக்கி, வெளியான, “நீ தானே என் பொன் வசந்தம் தமிழை விட தெலுங்கில் ஓரளவு ஓடியது.
அதில், சமந்தாவும், நானியும் நடித்திருந்தனர்.அதனால், தற்போதைய இயக்கத்தில் தயாராகும், “துருவ நட்சத்திரம் படத்தையும், தமிழ், தெலுங்கில் தயாரிக்கும் கவுதம் மேனன், இரண்டு மொழிகளிலுமே, சமந்தாவையே ஒப்பந்தம் செய்திருப்பதாக செய்தி கசிந்துள்ளது.
முன்னதாக, இப்படத்தில் த்ரிஷா பரிசீலிக்கப்பட்டு, பின் அமலா பாலையே மனதில் வைத்திருந்தார் கவுதம். பல கட்ட பரிசீலனைக்கு பின், இறுதியாக சமந்தாவையே தேர்வு செய்து விட்டாராம். இதனால், சந்தோஷத்தில் இருக்கிறார், சமந்தா.
No comments:
Post a Comment