அரும்பு மீசை முளைத்தபோது நடிக்கத் தொடங்கிய தனுஷ், அப்போதெல்லாம் தனக்கு பொருந்தக்கூடிய கதைகளாகத்தான் நடித்தார். ஆனால், சில நடிகர்கள் ஆக்ஷன் கதைகளில் நடிப்பதைப்பார்த்து அவருக்கும் அந்த ஆசை வந்ததால், சுள்ளான், புதுப்பேட்டை, பொல்லாதவன், படிக்காதவன், வேங்கை போன்ற படங்களில் ஆக்ஷன் ஹீரோவாக அவதரித்தார்.
ஆனால், ஒல்லிகுச்சி நடிகரான தனுஷ், கைக்கு பத்து பேரை பந்தாடியதை ரசிகர்கள் ஏற்கவில்லை. மாறாக கிண்டலடித்தனர். அதனால், இது நமக்கு சரிப்படாது என்று பின்னர் ரொமாண்டிக்கான கதைகள் பக்கம் திரும்பினார் தனுஷ். அது அவருக்கு ரொம்பவே மேட்சாக இருந்தது. அதோடு அவரது நடிப்பும் பேசும்படியாக வெளிப்பட்டது. அதனால்தான் விஜய் உள்ளிட்ட சில முன்னணி நடிகர்களே தனுஷை சிறந்த நடிகர் என்று ஓப்பனாக பேசி வருகின்றனர்.
அந்த வகையில், தற்போது அம்பிகாபதியிலும் கவித்துவமான காதல் கதையில் நடித்துள்ள தனுஷ், அடுத்து கே.வி.ஆனந்த் இயக்கத்தில் நடிக்கும் படத்தில் மீண்டும் ஆக்ஷன் கோதாவில் குதிக்கப்போகிறாராம். அதைப்பார்த்து, வேண்டாம் தம்பி இதெல்லாம் உன் உடம்புக்கு ஒத்து வராது என்று சில அபிமானிகள் அட்வைஸ் செய்தும் கேட்கவில்லையாம் தனுஷ். அது அப்ப, ஆனா இப்ப ஓரளவுக்கு என உடம்பு தேறிட்டுல்ல. இப்ப நான் பத்து பேரை அடிச்சாலும் பாக்கிறவங்க கண்டிப்பாக ஏத்துக்குவாங்க என்று அவர்களை சமாதானப்படுத்தி வருகிறாராம் சுள்ளான்.
No comments:
Post a Comment