Tuesday, July 2, 2013

நான் தமிழங்க... வேட்டிதான் என் உடை, என் அடையாளம்! - தனுஷ்



தமிழ்நாட்டில், தமிழ்க் குடியில் பிறந்தவர்கள் கூட, நடிகரான பிறகு வடநாட்டு உடைகள் அல்லது இங்கிலீஷ் உடைகளை விரும்பி அணியும் காலம் இது. 

ஆனால் நடிகர் தனுஷ் அவர்களில் விதிவிலக்கு. உடை விஷயத்தில் அவர் எப்போதுமே விரும்பி அணிவது வேட்டி சட்டைதான். 

பெரும்பாலும் சினிமா விழாக்களுக்கு அவர் வேட்டியில்தான் வருவார். வெளி நிகழ்ச்சிகளிலும் அப்படியே. அட, வட இந்தியாவில் நடந்த விழா ஒன்றில் கூட வேட்டி கட்டிக் கொண்டு போயிருந்தார் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். 


அவரிடம் இதுகுறித்து கேட்டபோது, "நான் வேட்டி - சட்டையில் இல்லாமல் வேறு உடையில் வந்தால்தான் நீங்கள் ஆச்சர்யப்பட வேண்டும். என்னைப் பார்த்து ஏன் இப்படிக் கேட்கிறார்கள் என்று தெரியவில்லை. 

நான் தமிழங்க... வேட்டி சட்டையை அணிய இதைவிட சிறப்பான காரணம் தேவையில்லையே... இதுதான் என் அடையாளம். எங்கே போனாலும் இந்த அடையாளத்தை நான் தொடர விரும்புகிறேன். இதைவிட வசதியான உடை வேறு எதுவும் இல்லை.

 ஏதோ ஸ்டைலுக்காக, விளம்பரத்துக்காக இப்படி உடை அணிவதாக நினைக்க வேண்டாம்," என்றார்.

R

No comments:

Post a Comment