கடந்த சில மாதங்களுக்கு முன் தமிழ் சினிமாவில் பரபரப்பாக பேசப்பட்டவர் ‘பவர் ஸ்டார்’ ஸ்ரீனிவாசன். இதற்கு காரணம் எனக்கு ‘ஒரே போட்டி சூப்பர் ஸ்டார்’ என்றதுதான்.
‘லத்திகா’ என்ற படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர், ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’ படத்தின மூலம் பிரபலமானார். இதனால் அவரை வைத்து படம் எடுக்க தயாரிப்பாளர்கள் போட்டி போட்டனர்.
‘யா யா’, ‘சும்மா நச்சுனு இருக்கு’, ‘ஆர்யா சூர்யா’, சங்கரின் ‘ஐ’ போன்ற படங்களிலும் சில படங்களில் ஒரு பாடலுக்கு நடனமும் ஆடி வந்தார். படங்களில் நடித்துக் கொண்டிருந்தபோதே மோசடி புகார் காரணமாக கைதாகி ஜெயிலில் அடைக்கப்பட்டார். இதனால் இவர் நடித்துக் கொண்டிருந்த படங்கள் முடங்கிப் போயின.
.jpg)
தமிழ் சினிமா என்னை ரொம்ப மிஸ் பண்ணியிருக்கும். சிலருடைய சதி திட்டத்தால் நான் சிக்கலில் மாட்டிக்கொண்டேன். ஆனாலும் பவர்ஸ்டார் எப்பொழுதும் பவர்புல்தான். ‘ஆர்யா சூர்யா’, ‘சும்மா நச்சுன்னு இருக்கு’, ‘யா யா’ போன்ற படங்களில் எனது ரோலில் நடித்து முடித்துவிட்டேன். இந்த படங்கள் என் ரசிகர்களை மிகவும் கவரும்.
எனது சொந்த படமான ‘ஆனந்த தொல்லை’ தீபாவளிக்கு வெளிவர இருக்கிறது. நான் ஜெயிலில் இருக்கும்பொது ஒருபோதும் சிறையில் இருந்ததாக உணரவில்லை. ஆசிரமத்தில் இருந்ததாக உணர்ந்தேன். அங்கே இருந்த 1400 போலீசாரும் என்னை பார்க்கும்பொழுது மிகவும் சந்தோஷப்பட்டனர். அவர்கள் என்னுடைய ரசிகர்களாக மாறினார்கள். விரைவில் என்னுடைய பிரச்சினையில் இருந்து மீண்டு வருவேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment