Monday, August 26, 2013

பட்டையக்கிளப்ப வருகிறார் அஞ்சலி!

தாய்மொழியான தெலுங்கு படங்களுக்கே முன்னுரிமை கொடுக்கப்போகிறேன் என்று சென்ற அஞ்சலிக்கு அங்கு எதிர்பார்த்தபடி படங்கள் கிடைக்கவில்லையாம். அதனால் தற்போது போல்பச்சன் படத்தின் ரீமேக்கான கோல்மால் படத்தில் நடித்து வருபவர், அடுத்தபடியாக தமிழுக்கு வர தயாராகி வருகிறார்.
இந்த நிலையில், ஏற்கனவே சுந்தர்.சி இயக்கத்தில் விஷாலுக்கு ஜோடியாக அவர் நடித்திருந்த மதகஜராஜா அடுத்த மாதம் 6-ந்தேதி திரைக்கு வருவதால் இந்த தருணத்தை பயன்படுத்தி தமிழில் புதிய படங்களை கைப்பற்றும் முயற்சியில் இறங்கியுள்ளார் அஞ்சலி. அதனால் இப்போதைக்கு தமிழுக்கு வரும் எண்ணமே இல்லை என்று முன்பு உதறித் தள்ளிய படாதிபதிகளுடன் அவசர சந்திப்பு நடத்தி வருகிறார் அஞ்சலி.
இந்தநிலையில், லாரன்ஸ் இயக்கி நடித்து வரும் கங்கா படத்திலும் அஞ்சலிக்கு சிறப்புத்தோற்றம் கிடைத்திருப்பதால், அவரது மார்க்கெட் எகிற வாய்ப்பிருக்கிறது என்று சில படாதிபதிகள் அஞ்சலியை அரவணைக்கத் தொடங்கியுள்ளனர். அதோடு, தெலுங்கில் நடித்திருப்பது போலவே தமிழிலும் கவர்ச்சியில் பட்டையக்கிளப்ப வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறார்களாம். அதற்கு எந்த தயக்கமும் இன்றி, டபுள் ஓ.கே சொல்லி வருகிறாராம் அஞ்சலி.

No comments:

Post a Comment