சினிமாவில் நடிப்பதும் அலுவலகம் செல்வது போன்று ஒரு வேலைதான். அதனால் என்னைக்கேட்டால், அதற்கு திருமணம் ஒரு தடையாக இருக்க முடியாது, இருக்கவும் கூடாது. ஆனால், பல முன்னணி நடிகைகளால் திருமணத்துக்குப்பிறகு நடிக்க முடியாத சூழ்நிலைதான் ஏற்பட்டு வருகிறது.
உதாரணத்துக்கு சொல்லவேண்டுமென்றால், கேரளாவைச்சேர்ந்த மஞ்சுவாரியார், நவ்யா நாயர், கோபிகா போன்றோர் சிறந்த நடிகைகள். ஆனால், அவர்களால் திருமணத்துக்குப்பிறகு நடிக்க முடியவில்லை. சிலர் குழந்தை குட்டிகள் என்று ஆனதால் குடும்பத்தில் பிசியாகி விட்டனர்.
இன்னும் சிலர் நடிக்க ஆசைப்பட்டபோதும், கணவர் குடும்பத்தைச்சேர்ந்தவர்கள் அதற்கு அனுமதி கொடுக்காமல் நடிப்பை தள்ளி வைத்து விட்டு வாழ்ந்து வருகிறார்கள்.
இதில் என்னை எடுத்துக்கொண்டால், சினிமாவில் நடித்துக்கொண்டேயிருக்க வேண்டும் என்றுதான் ஆசைப்படுகிறேன். ஆனால், திருமணம் என்ற ஒரு நிகழ்வு நடைபெறும்போது அதன் பிறகு நடக்கும் ரியாக்ஷனைப்பொறுத்துதான் அதை சொல்ல முடியும்.
ஆக, திருமணத்துக்குப்பிறகும் நான் நடிக்கலாம் இல்லையேல் நடிக்காமலும் போகலாம். அதனால், அதற்கு முன்னதாகவே நிறைய படங்களில் நடிக்க முடிவெடுத்திருக்கிறேன். அதனால் அவசரப்பட்டு திருமணம் செய்து கொள்ளாமல், 30 வயதுக்குப்பிறகுதான் திருமணம் செய்வேன் என்று சொல்லும் அமலாபாலுக்கு இப்போது 21 வயதுதான் ஆகிறதாம். அவர் சொல்லும் கணக்கில்பார்த்தால் இன்னும் 9 ஆண்டுகளுக்கு அமலாவின் கலைச்சேவை தொடருமாம்.
No comments:
Post a Comment