Tuesday, August 27, 2013

சமயோசித நட்பை கடைபிடிக்கும் நயன்தாரா!

அஜீத்துடன் ஆரம்பம் படத்திற்கு கமிட்டானபோது, காதலில் தோல்வியுற்ற கன்னியாய் எந்நேரமும் கவலை தோய்ந்த முகத்துடன் காணப்பட்டார் நயன்தாரா. ஆனால், அதையடுத்து ராஜாராணி, அனாமிகா போன்ற படங்கள் கமிட்டானதையடுத்து, சினிமாவில் கிடைத்த வரவேற்பு நயன்தாராவிற்குள்ளிருந்த காதல் காயத்திற்
கு மருந்திட்டு ஆற்றியது.
அதனால், சமீபகாலமாக புது உற்சாகத்துடன் காணப்படும் நயன்தாராவின் உடம்பிலும், முகத்திலும் புதுப்பொலிவு பளிச்சிடுகிறது. அதைப்பார்த்து, இப்போது ஜெயம்ரவியுடன் ஒரு படம், கோவிசந்துடன் ஒரு படம் என மேலும் இரண்டு முன்னணி நடிகர்களின் படங்கள் அவருக்கு கிடைத்துள்ளன. அதனால் மீண்டும் கலகலப்பான நயன்தாராவாக அவர் மாறியுள்ளார்.
மேலும், இதுவரை ஆண்களை நம்பி அவர்களிடம் நெருங்கி பழகி தனது இமேஜை கெடுத்துக்கொண்ட நயன்தாரா, இனி அப்படி ஒரே பக்கம் சாயப்போவதில்லையாம். ஆண்-பெண் என இருபாலாரிடமும் சமயோசித நட்பை கடைபிடிக்கப்போகிறாராம். இதனால், முன்பெல்லாம் நயன்தாராவை சுற்றி நடிகர்கள் மட்டுமே இருந்த நிலைமாறி, இப்போது நடிகைகளும் அவர் இருக்கும் இடங்களில் கூட்டமாய் காணப்படுகிறார்கள்.

No comments:

Post a Comment