ஆர்.எஸ்.ராஜாவின் இயக்கத்தில் பிரேம்ஜி இரட்டை வேடத்தில் நடித்துவரும் படம் ‘மாங்கா’. முழுநீள நகைச்சுவை படமாக உருவாகிவரும் இப்படத்தில் விஞ்ஞானியாக ஒரு வேடத்திலும், பாகவதராக மற்றொரு வேடத்திலும் பிரேம்ஜி நடிக்கிறார்.
இதில், பாகவதராக நடிக்கும் காட்சிகள் கேரளாவில் படமாக்கப்பட்டு வருகிறது. இதற்காக பிரேம்ஜி கேரளா புறப்பட்டு சென்றுள்ளார். இதை தனது டுவிட்டர் பக்கத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இப்படத்தில் பிரேம்ஜிக்கு ஜோடியாக ஹரிதா நடிக்கிறார். மேலும், தம்பி ராமையா, மனோபாலா போன்ற எண்ணற்ற காமெடி நட்சத்திரங்களும் நடித்துள்ளனர். இப்படத்திற்கு பிரேம்ஜியே இசையமைக்கிறார். மதன்கார்க்கி, சிநேகன் ஆகியோர் பாடல்களை எழுதியுள்ளனர். டிரீம் சோன் மூவிஸ் பெரும் பொருட்செலவில் படத்தை தயாரிக்கிறது.
No comments:
Post a Comment