Tuesday, August 27, 2013

இரண்டு படங்களோடு பரபரப்பு அடங்கிவிட்டதே!- லட்சுமிமேனன் விளக்கம்


கும்கி, சுந்தரபாண்டியன் படங்கள் வந்த நேரத்தில் பரபரப்பாக பேசப்பட்ட நடிகை லட்சுமிமேனன். ஆனால், குட்டிப்புலிக்குப்பிறகு அவரது பெயரில் இருந்த பரபரப்பு அடங்கிப்போயிற்று. ஆனால் இப்போதும், அவர் கைநிறைய படங்கள் வைத்திருக்கிறார். அதோடு, விஷால், சித்தார்த், விமல் என்று முன்னணி நடிகர்களுடனும் நடித்து வருகிறார்.
இதுபற்றி லட்சுமிமேனனைக்கேட்டால், ஒரு நடிகை என்ட்ரி ஆகும்போது அவரைப்பற்றி நிறைய பேசுவார்கள். அதேபோல் என்னைப்பற்றியும் பேசினார்கள். இப்போது பேசி முடித்து விட்டார்கள். அதனால்தான் பழைய பரபரப்பு இல்லை என்கிறார். அதேசமயம், எனது நடிப்பைப்பற்றி இனிமேல் நிறைய பேசும் காலமும் வரும் என்கிறார்.
இப்போது நடித்துள்ள ஜிகர்தண்டா, பாண்டியநாடு, மஞ்சப்பை, சிப்பாய் உள்ளிட்ட படங்களில் எனது நடிப்புக்கு சவால் விடக்கூடிய வேடங்களாக கிடைத்திருக்கிறது. அதனால், நடித்த படங்களின் சாயல் இல்லாத அளவுக்கு, புதுமையான நடிப்பை வெளிப்படுத்தி வருகிறேன். இந்த படங்கள் திரைக்கு வரும்போது என்னைப்பற்றி இன்னும் கூடுதலாக பேசுவார்கள் 

No comments:

Post a Comment