Monday, August 26, 2013

சிக்ஸ்பேக் உடம்பை கண்டிநியூ பண்ணினால் பிரச்சினைதான்!

சிக்ஸ்பேக் உடல்கட்டுக்கு மாறி நடிப்பது ஒரு பேஷனாகி விட்டது. சத்யம் படத்திலேயே தனது உடல்கட்டை சிக்ஸ்பேக்கிற்கு மாற்றி நடித்த விஷால் இபபோது மதகஜராஜா படத்துக்காகவும் சிக்ஸ்பேக் உடல்கட்டுக்கு மாறி நடித்துள்ளார்.
இதுபற்றி அவர் கூறுகையில், சிக்ஸ்பேக் என்பதை பரபரப்பை ஏற்படுத்துவதற்காக யாரும் செய்ய நினைப்பதில்லை. கதைக்கும், காட்சிக்கும் அவசியம் என்று இயக்குனர் சொல்கிறபோது மட்டுமே அதற்கான உடற்பயிற்சிகளில் ஈடுபடுகிறோம். காரணம், இதற்காக மாதக்கணக்கில் உடற்பயிற்சி மட்டுமின்றி தீவிர உணவுக்கட்டுப்பாட்டை கடைபிடிக்க வேண்டியுள்ளது.
மேலும், சிக்ஸ்பேக் என்கிறபோது உடம்பில் நீரின் அளவு குறைந்து விடுகிறது. அதனால் அதை தொடர்ந்தால் உடம்பில் வேறு பிரச்சினைகள் உருவாகி விடும். அதனால் தேவையான காட்சிகளை வேகமாக படமாக்கி விட்டு மீண்டும் இயல்பான உடம்புக்கு மாறி விடவேண்டும். மீறி அதை தொடர்ந்தால், முகத்தில் அழகு போய் விடும். முக்கியமாக உடல்ரீதியான வேறு பாதிப்புகளுக்கும் அது வழிவகுத்து விடும் என்கிறார்.

No comments:

Post a Comment