Tuesday, August 27, 2013

அசைவ உணவுக்காக ஏங்கும் விக்ரம்

முன்னணி இடத்தை தக்க வைத்து கொள்வதற்காக, ரொம்பவே மெனக் கெடுகிறார், விக்ரம். அவர், இதற்கு முன் நடித்த சில படங்கள் ஊத்திக் கொண்டதால், இப்போது நடித்து வரும், “ஐ படத்தை மிகவும் எதிர்பார்த்துள்ளார். இப்படத்துக்காக, இரண்டு விதமான மாறுபட்ட கெட்டப்புக்களில் நடிக்கிறார் விக்ரம். இதில், ஒரு கெட்அப்பில், மிகவும் உடல் மெலிந்து தோற்றமளிக்க வேண்டுமாம்.
இதற்காக, 84 கிலோ எடையிருந்த விக்ரம், பல மாதங்களாக செய்த உடற்பயிற்சி, டயட் காரணமாக, 14 கிலோ குறைத்து, 70 கிலோ கொண்டவராக உருமாறி இருக்கிறாராம்.
இது தொடர்பான காட்சிகளை படமாக்கி முடியும் வரை, உடலில் எந்த மாற்றமும் ஏற்படக்கூடாது என்பதற்காக, வெயிட் போடாத உணவுகளாக அரைவயிறும், கால் வயிறுமாக சாப்பிட்டபடி, பசியோடே இருந்து வருகிறாராம் விக்ரம். இப்போதைக்கு பழங்கள், பச்சை காய்கறிகள் தான் அவரது உணவுகளாம். அரிசி, நான்- வெஜ் அயிட்டங்களை பார்த்தே, பல மாதங்கள் ஆகிவிட்டதாம்.

No comments:

Post a Comment