Monday, August 26, 2013

சண்டை காட்சிகளில் சாகசம்: அஜீத்தின் ஜிலீர் அனுபவம்

“ஆரம்பம் படத்தில், ஒவ்வொரு சண்டை காட்சிகளிலும், அதிக ரிஸ்க் எடுத்து நடித்துள்ளார் அஜீத். இதனால், பலமுறை விபத்துகளில் சிக்கினார் என்ற போதும், கடைசிவரை, டூப் நடிகரை
பயன்படுத்தாமல், துணிச்சலாக அவர் நடித்ததாக கூறுகின்றனர்.அதிலும், இப்படத்தில் ஸ்டன்ட் மாஸ்டராக பணியாற்றியுள்ள லீ விட்டேக்கர் என்ற ஹாலிவுட் மாஸ்டர், அஜீத்தை, ஒரு சாகசக்காரர் என்கிறார்.
“கோலிவுட்டில் கமலுக்கு அடுத்தபடியாக கடினமாக உழைக்க கூடிய நடிகர் அஜீத் என்றுகூறும் அவர், “ஆரம்பம் படத்தில் நடித்த போது, பல தடவை உடம்பில் காயங்கள் ஏற்பட்ட போதும், அவர் மனம் தளரவில்லை.
மீண்டும் மீண்டும் ரிஸ்க்கான ஆக்ஷன் காட்சிகளில் தில்லாக நடித்தார். அப்போது, என் கண்களுக்கு ஹாலிவுட்டின் டாம் க்ரூஸ் போன்று தெரிந்தார், அஜீத் என்கிறார் லீ விட்டேக்கர்.

No comments:

Post a Comment