இயக்குனர் சசிகுமார் தயாரிப்பில் ‘தலைமுறைகள்’ என்ற படத்தை இயக்கி வருகிறார் பாலுமகேந்திரா. இப்படத்திற்கு இளையராஜா இசையமைக்கிறார். பாலுமகேந்திரா கடைசியாக 2005-ஆண்டு ‘அது ஒரு கனாகாலம்’ என்ற படத்தை இயக்கினார். கிட்டத்தட்ட 7 ஆண்டுகளுக்கு பிறகு பாலுமகேந்திரா இயக்கும் படம் இது.
இப்படம் தாத்தாவுக்கும் பேரனுக்கும் இடையிலான உறவை மையமாகக் கொண்டு உருவாகியுள்ளது. இப்படத்தில் சசிகுமார் பேரனாக முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மற்றும் பல புதுமுகங்களும் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது முடிவடைந்துள்ளது.
இந்நிலையில், படத்திற்கு சான்றிதழ் பெறுவதற்காக தணிக்கைக் குழுவுக்கு படத்தை திரையிட்டு காண்பித்தனர் படத்தை பார்த்த தணிக்கைக் குழுவினர் இப்படத்திற்கு ‘யு’ சான்றிதழ் வழங்கியுள்ளனர். இதனால் படக்குழுவினர் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
No comments:
Post a Comment