Tuesday, August 27, 2013

30ந் தேதிக்கு பிறகு தங்க மீன்களை குறை சொல்லுங்கள்: ராம் வேண்டுகோள்


கற்றது தமிழ் ராம் பெரிய போராட்டத்துக்கு பிறகும், நீண்ட இடைவெளிக்குப் பிறகும் டைரக்ட் செய்துள்ள படம் தங்க மீன்கள். தந்தை மகள் உறவின் மகத்துவத்தையும், இன்றைய தனியார் கல்வி முறை பற்றியும் அவர் எடுத்துள்ள இந்தப் படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இதன் தயாரிப்பாளர் இயக்குனர் கவுதம் மேனனுக்கு பொருளாதார நெருக்கடி ஏற்பட்டதைத் தொடர்ந்து படம் வெளிவர தாமதம் ஆனது. இப்போது வருகிற 30ந் தேதி வெளிவர இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
படத்தை பத்திரிகையாளர்களுக்கு போட்டுக்காட்டிய ராம், நிருபர்களிடம் கூறியதாவது: பெரிய போராட்டத்துக்கு பிறகு இந்தப் படம் வருகிற 30ந் தேதி ரிலீசாகுது. கஷ்டப்பட்டு ரிலீஸ் பண்ணும் கவுதம் மேனன் சாருக்கு நன்றி தெரிவிச்சுக்கிறேன்.
இரண்டு வருடம் படம் தயாரிப்புல இருந்திச்சு. என் மகளா நடிச்ச குழந்தைக்கு சில சீன்ல பல்லு இருக்கும், சில சீன்ல பல் விழுந்திருக்கும் அதுக்கு காரணம் கால இடைவெளிதான். உங்களுடைய விமர்சனங்களை மதிக்கிறேன். உங்கள் பார்வைகளே என் குறைகளை குறைப்பதற்கான வழி என்பதையும் அறிவேன்.
வருகிற 30ந் தேதிக்கு பிறகு விமர்சியுங்கள். அது வியாபாரத்திற்கு உதவும். நிறைகளை இப்போதே சொல்லுங்கள். குறைகளை 30ந் தேதிக்கு பிறகு சொல்லுங்கள் என்றார்

No comments:

Post a Comment