Saturday, August 31, 2013

பார்வையற்றவர்கள் கல்விக்காக மீண்டும் வெளியிடப்பட்ட அஜீத்தின் ‘மங்காத்தா’

வெங்கட் பிரபு இயக்கத்தில் அஜீத், திரிஷா நடித்து 2011-ஆம் ஆண்டு வெளிவந்த படம் ‘மங்காத்தா’. யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார். இப்படத்தில் அஜீத் முதன்முறையாக நரைத்த முடியுடன் நடித்திருந்தார். அவருடைய இந்த தோற்றம் ரசிகர்களிடையே பெருத்த வரவேற்பை பெற்றதோடு, படமும் ஹிட்டானது.

இந்த படம் வெளியாகி 2 ஆண்டுகள் ஆகிவிட்டன. இப்படத்திற்காக அஜீத்துக்கு 3 விருதுகள் கிடைத்தன. இந்நிலையில், 2 ஆண்டுகள் முடிவடைந்ததை கொண்டாடும்விதமாக தூத்துக்குடி கிளியோபட்ரா தியேட்டரில் இன்று இந்த படத்தை மீண்டும் வெளியிட்டனர்.
இன்று காலை 11.30 மணிக்கு சிறப்பு காட்சி திரையிடப்பட்டது. இந்த சிறப்பு காட்சி மூலம் கிடைக்கும் பணத்தை பார்வையற்ற குழந்தைகளின் கல்வி செலவுக்காக வழங்கப் போகிறார்களாம்.

No comments:

Post a Comment