Sunday, August 25, 2013

இனி ஒவ்வொரு படத்திலும் வேஷ்டி, லுங்கி உண்டு: தனுஷ்

சென்னை: இனி மேல் தனது படங்களில் ஒரு பாட்டுக்காவது லுங்கி அணிவது என்று தனுஷ் முடிவு செய்துள்ளார்.
தனுஷ் சென்டிமென்ட்கள் நிறைந்த மனிதராக உள்ளார். அவர் அண்மை காலமாக சினிமா விழாக்களுக்கு வேஷ்டி, சட்டை அணிந்து வருகிறார். ஆள் குச்சியாக இருப்பதால் வேஷ்டி, சட்டையில் கொஞ்சமாவது உடம்பு இருப்பது போன்று தெரிகிறது.
என்ன தனுஷ் இப்படி கெட்டப்பே மாறிப் போய்விட்டது என்று பலரும் அவரிடம் கேட்டனர்.
தமிழன்டா
நான் ஒரு தமிழன். தமிழரின் பாரம்பரிய உடையான வேஷ்டி, சட்டையை அணிவதில் பெருமைப்படுகிறேன் என்று ஒரு பஞ்ச் டயலாக்கை விட்டு அனைவரின் வாயையும் அடைத்துவிட்டார்.
படத்திலும் கூட

சினிமா விழாக்கள் தவிர்த்து இனிமேல் தான் நடிக்கும் படங்களிலும் ஒரு காட்சியிலாவது வேஷ்டி, சட்டை அணிந்து வருவது என்று தனுஷ் தீர்மானித்துள்ளார்.

லுங்கியும்
வேஷ்டி, சட்டையை தவிர்த்து தான் நடிக்கும் படங்களில் ஒரு பாட்டுக்காவது லுங்கி கட்டி ஆடுவது என்றும் முடிவு செய்துள்ளார் தனுஷ்.
பல படங்களில்
என்னுடைய பல படங்களில் லுங்கி கட்டி நடித்துள்ளேன். அதிலும் குறிப்பாக ஆடுகளத்தில் ஒரு பாட்டு முழுவதும் லுங்கி கட்டித் தான் ஆடினேன். அது பெரும்பாலானவர்களுக்கு பிடித்திருந்தது என்று தனுஷ் தெரிவித்தார்.
கிராமத்து வாசம்
ஆடுகளத்தில் அவரது லுங்கி டான்ஸை கிராமத்து மக்கள் பார்த்துவிட்டு அவரை தங்களில் ஒருவராகவே நினைத்தார்களாம். அதனால் சென்டிமென்டாக இனிவரும் படங்களில் ஒரு பாடலுக்காவது லுங்கி கட்டி ஆடுவது என்று தனுஷ் முடிவு செய்துள்ளார்.

No comments:

Post a Comment