கோலிவுட்டிலிருந்து, பாலிவுட்டுக்கு சென்ற போது, அதிரடி ஆட்டமாடி, அங்குள்ள நடிகைகளை ஓரங்கட்டியவர் ஸ்ரீதேவி. ஆனால், அப்படிப்பட்டவர் திருமணத்திற்கு பின், சினிமா வாசனையே இல்லாத குடும்ப தலைவியாக மாறினார்.
இந்நிலையில், 15 ஆண்டுகளுக்கு பின், “இங்கிலீஷ் விங்கிலீஷ் படம் மூலம், சினிமாவில் ரீ-என்ட்ரி ஆன ஸ்ரீதேவி, மீண்டும் தன் ஆட்டம், பாட்டங்களை அரங்கேற்றம் செய்து வருகிறார். சமீபத்தில், மும்பையில் நடந்த ஒரு படவிழாவுக்கு சென்ற ஸ்ரீதேவியை மேடையில் நடனமாடிக் கொண்டிருந்த பிரபுதேவா, திடீரென தன்னுடன் இணைந்து நடனமாட அழைத்தபோது, எந்தவித தயக்கமும் இன்றி, மேடையேறி கலக்கலாக ஆடினாராம்.
ஸ்ரீதேவியின், இந்த ஆட்டத்தை மும்பை படவுலகினர் மட்டுமின்றி, அவரது இரண்டு மகள்களும், முதன் முறையாக நேரில் கண்டுகளித்தனராம்.
No comments:
Post a Comment