Tuesday, September 3, 2013

பிரியா ஆனந்திடம் பந்தயத்தில் தோற்ற அதர்வா

அதர்வா மற்றும் பிரியா ஆனந்த் ஜோடியாக நடிக்கும் ‘இரும்புக் குதிரை’ படத்தின் படப்பிடிப்பு பாண்டிச்சேரியில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. படப்பிடிப்பு தவிர மற்ற நேரங்களில் யாருடனும் பழகாமல் தானுண்டு தன் வேலையுண்டு என்று இருப்பவர் நடிகர் அதர்வா. அதே சமயம் நடிகை பிரியா ஆனந்த் இருக்கும் இடத்தில் கலகலப்பிற்குப் பஞ்சம் இருக்காது. ஒரே கேளிக்கையும், சிரிப்புமாய் இடமே நிறைந்திருக்கும்.
கலகலப்பான நடிகை பிரியா, நடிகர் அதர்வாவிடம் ஏதோ பந்தயம் வைத்துள்ளார். பந்தயத்தில் தோற்றால் அதர்வா பிரியாவிற்கு சைக்கிள் ஒன்று வாங்கித்தர வேண்டும் என்பது நிபந்தனையாகும். பந்தயத்தில் அதர்வா தோற்றதால் சொன்னபடி அவர் தனக்கு சைக்கிள் வாங்கித்தர வேண்டும் என்று கூறிய பிரியா, அந்தப் புகைப்படங்களை இணையதளத்தில் வெளியிடுவதாகக் கூறியுள்ளார்.
அவர் ஏற்கனவே வெளியிட்டுள்ள இரண்டு புகைப்படங்களில் ஒன்றில் அதர்வாவும், பிரியாவும் இணைந்து ஹோட்டல் ஒன்றில் உணவு அருந்திக் கொண்டிருப்பது போன்ற காட்சி காணப்பட்டது. மற்றொரு புகைப்படத்தில் இயக்குனர் யுவராஜ் போசும், ஒளிப்பதிவாளர் கோபி அமர்நாத்தும் இவர்கள் இருவருடன் நின்று கொண்டு சேஷ்டைகள் காண்பித்துக் கொண்டிருப்பது போன்ற காட்சி இருந்தது. இந்த போட்டோக்களே அவர்கள் அங்கு சந்தோஷமாக படப்பிடிப்பில் ஈடுபட்டுள்ளதை எடுத்துக்காட்டுகின்றது.


No comments:

Post a Comment