நடிகர் சிம்பு கதை, திரைக்கதை எழுதி இயக்கி, நடித்து 2004-ல் வெளிவந்த படம் ‘மன்மதன்’. இப்படத்தில் இவருக்கு ஜோடியாக ஜோதிகா, சிந்து துலானி நடித்திருந்தனர். இப்படத்தில் சிம்பு இரட்டை வேடத்தில் நடித்திருந்தார்.குறிப்பாக, மொட்டை கேரக்டரில் இவர் நடித்திருந்தது ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.
ரசிகர்களின் அமோக வரவேற்பை பெற்ற இப்படத்தின் இரண்டாம் பாகத்தை ‘மன்மதன்-2’ என்ற பெயரில் சிம்பு இயக்கப்போவதாக தகவல்கள் வெளியாகவுள்ளன. இப்படத்தை அவரே தயாரிக்கவும் போகிறாராம்.
சிம்பு தற்போது ‘வாலு’, ‘வேட்டை மன்னன்’ ஆகிய படங்களில் பிசியாக உள்ளார். இப்படங்களை முடித்த பிறகு ‘மன்மதன்-2’-வை இயக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
No comments:
Post a Comment