Wednesday, September 4, 2013

நலிந்தோருக்கு நிதி திரட்ட மாண்டலின் ராஜேஷ், பாடகர் கார்த்திக் இசை

நலிந்தோருக்கு நிதி திரட்டுவதற்காக ‘ஸ்ருஷ்டி’ என்ற பெயரில் சென்னை மியூசிக் அகடமியில் நாளை மறுநாள் (6-ந்தேதி) மாலை 6.30 மணிக்கு இசை விழா நடக்கிறது.
இதில் மாண்டலின் ராஜேஷ் இசை நிகழ்ச்சியும் சினிமா பின்னணி பாடகர் கார்த்திக்கின் பாடலும் இடம் பெறுகிறது. பிரபல இசை குழுவினரான லூயிஸ் பாங்க்ஸ் ஜியே பாங்க்ஸ் மற்றும் ஷெல்டல் டிசில்வா, பைசல் குரேஷி இசை பாடல்கள் இடம் பெறுகின்றன.
இது குறித்து மாண்டலின் ராஜேஷ், கார்த்திக் கூறும்போது,
இதயகோளாறு உள்ள சிறு குழந்தைகளின் அறுவை சிகிச்சைக்காகவும், நலிவுற்றோருக்கு புற்று நோய் விழிப்புணர்வு பரிசோதனை மற்றும் சிகிச்சைக்காகவும் பிறந்த குழந்தைகளுக்கு பார்வை இருளாமல் தடுக்கவும் நிதி திரட்டுவதற்காக சென்னை டவர்ஸ் ரோட்டரி சங்கத்துடன் இணைந்து இந்த இசை விழாவை நடத்துகிறோம்.
பெண்கள், குழந்தைகளின் மருத்துவ, கல்வி நலன் களுக்கும் இந்த நிதி பயன் படுத்தப்படும் என்றனர். சென்னை பவர்ஸ் ரோட்டரி சங்க தலைவர் கிருஷ்ண சந்தர், பில்ரோத் ஆஸ்பத்திரி நிர்வாக இயக்குனர் ராஜேஷ் உடன் இருந்தனர்.


No comments:

Post a Comment