Monday, September 2, 2013

ரஜினிக்காக எஸ்பிபி குரலில் 'மெதுவாகத்தான்...'- கோச்சடையானிலிருந்து இன்னுமொரு பாட்டு


சென்னை: கோச்சடையான் படத்தில் ரஜினிக்காக தான் பாடியுள்ள இன்னுமொரு பாடலின் சில வரிகளை வெளியிட்டுள்ளார் பாடகர் எஸ்பி பாலசுப்ரமணியன்.

 ரஜினி இரட்டை வேடங்களில் நடிக்கும் 3 டி படமான கோச்சடையானுக்கு ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார். 

வைரமுத்து அனைத்துப் பாடல்களையும் எழுதியுள்ளார். இந்தப் படத்தில் இடம்பெற்ற ஒரு பாடலுக்கு ரஜினியே குரல் கொடுத்துள்ளார்.

மற்ற பாடல்களில், ரஜினி - தீபிகா பாடும் டூயட் பாடல் ஒன்றை கடந்த டிசம்பரில் ரஜினி அனுமதியோடு வைரமுத்து வெளியிட்டார். சங்கத் தமிழில் அமைந்த அந்தப் பாடல் 'செந்தீ விழுந்த செம்பொற் பாறையில்...' என்று தொடங்கியது

இப்போது படத்தில் இடம்பெற்ற அழகான மெலடிப் பாடல் ஒன்றின் சில வரிகளை எஸ்பி பாலசுப்ரமணியம் ஒரு பேட்டியின்போது பாடிக் காட்டியுள்ளார்.

சமீபத்தில் லண்டனில் மீடியாவுக்கு அளித்த பேட்டி ஒன்றில், தான் பாடிய பாடல்களில் மனதுக்கு மிகவும் இதமாக அமைந்த மெலடிப் பாடல் என்று கூறி கோச்சடையான் பாடலைக் குறிப்பிட்டார்

அந்தப் பாடல் "மெதுவாகத்தான்... மெதுவாகத்தான்.. எனை ஈர்க்கிறாய்..." என தொடங்குவதாகப் பாடிக் காட்டினார். தன்னுடன் இந்தப் பாடலை சாதனா சர்க்கம் இணைந்து பாடியிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment