கன்னட நடிகர் சுதீப் நடிக்கும் படத்தில் நாயகியாக ஜோடி சேருகிறார் வரலட்சுமி. கடந்த பிப்ரவரி மாதம் தெலுங்கில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற படம் தான் ‘மிர்ச்சி'.
ஆந்திர சினிமாவின் ‘ரிபெல்ஸ்டார்' பிரபாஷ், அனுஷ்கா, ரிச்சா கங்கோபாத்யாய் நடித்திருந்த இந்தப்படத்தை கொரட்டாலா சிவா இயக்கியிருந்தார். தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்திருந்தார்.
தற்போது இந்தப்படம் கன்னடத்தில் ரீமேக் செய்யப்படுகிறது. நான் ஈ புகழ் சுதீப் இந்தப்படத்தின் உரிமையை வாங்கி பிரபாஸ் கேரக்டரில் நடிப்பதோடு அவரே படத்தை இயக்குகிறார்.
அனுஷ்கா நடித்த கேரக்டரில் வரலட்சுமி சரத்குமார் நடிக்கிறார். இதன்மூலம் கன்னட திரையுலகில் காலடி எடுத்துவைக்கிறார் வரலட்சுமி.
சிம்பு நடித்த போடா போடி படத்தில் அறிமுகமானவர் வரலட்சுமி. முதல் படத்திலேயே அதிரடி கிளாமராக நடித்த இவர், தனது சொந்த குரலிலேயே டப்பிங்கும் பேசி அசத்தியிருந்தார். இப்போது கன்னட படத்தில் அறிமுகமாகிறார் வரலட்சுமி. கன்னட ரசிகர்களை இவர் கவர்வாரா என்பது படம் வெளியான பின்னரே தெரியவரும்.
விஷாலுடன் சமீபத்தில் மதகஜராஜா படத்தில் நடித்துள்ளார் வரலட்சுமி. இந்த திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது. இதில் இன்னொரு ஹீரோயினாக அஞ்சலியும் இருந்தாலும், முதல் படத்தைப்போன்றே இந்த படத்திலும் கவர்ச்சியில் கலக்கியுள்ளாராம் வரலட்சுமி. இந்த படத்தில் விஷாலுடன் இணைந்து அதிரடி நடனமும் ஆடியிருக்கிறாராம்.
சுதீப் ஏற்கனவே சிங்கம் படத்தை கன்னடத்தில் கெம்பே கவுடா என்ற பெயரில் இயக்கி நடித்து சூப்பர் ஹிட் கொடுத்தவர். இப்போது மிர்ச்சி படத்தை ரீமேக் செய்கிறார். மிர்ச்சி படத்தில் ஹிந்தி உரிமையை ஜான் ஆப்ரஹாம் வாங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment