தமிழில் முருகதாஸ் இயக்கத்தில் விஜயகாந்த் நடித்து வெளியான படம் ‘ரமணா’. இப்படம் இந்தியில் ரீமேக் ஆகிறது. இப்படத்தில் விஜயகாந்த் கதாபாத்திரத்தில் அக்ஷய் குமார் நடிக்கிறார். இந்தி திரையுலகின் பிரபல இயக்குனர் சஞ்சய் பன்சாலி இயக்குகிறார். படத்திற்கு ‘கப்பார்’ என்று தலைப்பும் வைத்துவிட்டனர். வரும் டிசம்பரில் படப்பிடிப்பை தொடங்க இருக்கின்றனர்.
இப்படத்தில் அக்ஷய்குமார் ஜோடியாக நடிக்க ஸ்ருதிஹாசன், இலியானா ஆகிய இருவரில் ஒருவரை நடிக்க வைக்க திட்டமிட்டனர். ஆனால், தற்போது இருவரையும் பின்னுக்கு தள்ளிவிட்டு அமலா பாலை ஓ.கே. செய்துள்ளனர்.
படத்தின் நாயகி தென்னிந்திய முக சாயலில் இருக்க வேண்டும் என்பதால் ஸ்ருதி, இலியானாவை விட்டுவிட்டு அமலா பாலை ஒப்பந்தம் செய்துள்ளனராம். இப்படத்தின் போட்டோ ஷுட் மற்றும் டிஸ்கஷன்களுக்காக இப்போது அடிக்கடி மும்பை பறந்து கொண்டிருக்கிறாராம் அமலாபால்.
No comments:
Post a Comment