Sunday, September 1, 2013

கே.வி.ஆனந்த் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் அனேகன்

அயன், கோ, மாற்றான் என்று கே.விஆனந்த் வைக்கிற ஒவ்வொரு பெயரும், அப்படீன்னா என்ன என்று கேட்க வைக்கும். புதிய படத்துக்கு அவர் வைத்திருக்கும் பெயர், அனேகன். அப்படீன்னா…?
ஒன்றானவன்… உருவில் பலவானவன்.
கடவுளைத்தானே இப்படி சொல்வாங்க, ஒருவேளை
அனேகன் ஆன்மீகப்படமோ என்றெல்லாம் கவலைப்பட வேண்டாம். நம் படத்தின் ஹீரோக்கள் செய்யும் சாகஸங்கள் கடவுளையும் தாண்டியவை. அப்படியொரு ஹீரோயிச படம்தான் அனேகன். ஹாரிஸ் ஜெயராஜ் இசை, ஏஜிஎஸ் தயாரிப்பு என்பதெல்லாம் ஏற்கனவே கேள்விப்பட்டவை. ஹீரோயின் யார்…?
அமிரா என்ற புதுமுகமாம். அஜீத்தின் ஆரம்பம் படத்துக்கு ஒளிப்பதிவு செய்திருக்கும் ஓம் பிரகாஷ் கேமராமேன். புதுச்சேரியில் நாளை (2 ஆம் தேதி) படப்பிடிப்பு தொடங்குகிறது.
கே.வி.ஆனந்த் படம் என்றால் வெளிநாடு இல்லாமலா? மலேசியா, வியட்நாம், கம்போடியா, பொலிவியா என்று வேர்ல்ட் டூட் இந்தமுறையும் உண்டு.
பெரிய பட்ஜெட்… பெரிய ஆக்ஷன். தனுஷ் தாங்குவாரா?


No comments:

Post a Comment