Thursday, September 5, 2013

ஆண்ட்ரியா திரையுலகின் முக்கியமான நடிகை: இயக்குனர் ராம்

‘தங்கமீன்கள்’ படத்தை அடுத்து இயக்குனர் ராம், இயக்கும் அடுத்த படத்திற்கு ‘தரமணி’ என்று பெயரிட்டிருக்கின்றனர். இப்படத்தை ஜே.எஸ்.கே. பிலிம்ஸ் கார்ப்பரேஷன் நிறுவனம் தயாரிக்கிறது. வசந்த் ரவி நாயகனாகவும், ஆண்ட்ரியா நாயகியாகவும் நடிக்கின்றனர்.
இப்படத்திற்காக ஒரு பாடல் காட்சியை இயக்குனர் ராம் படமாக்கிவிட்டார். வரும் 2014-ஆம் ஆண்டு ஜனவரியில் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனர். இப்படத்தை பெருபான்மையான ரசிகர்களின் ரசனைக்கேற்ப உருவாக்க இயக்குனரும், தயாரிப்
பாளரும் திட்டமிட்டுள்ளனர். இப்படத்தில் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியிடப்பட்டது. இதை பார்த்த திரைப்பட விநியோகஸ்தர்கள் தங்களின் விருப்பதை இயக்குனர் ராமிடம் தெரிவித்துள்ளனராம்.
இப்படம் குறித்து இயக்குனர் ராம் கூறும்போது, உலகமயமாக்கலின் நடைபெறும் ஒரு நகர்ப்புறக் காதல் கதையாக இப்படத்தை சித்தரித்துள்ளேன். மோதல், செக்ஸ், காமம் மற்றும் பொருளாதார பிரச்சினைகளின் இடையே ஆண், பெண் இருவருக்கும் இடையே ஏற்படும் நிரந்தரமான காதல் குறித்து இதில் சொல்லவிருக்கிறேன்.
இப்படத்தின் நாயகியாக நடித்து வரும் ஆண்ட்ரியாவின் திறமைகள் திரைத்துறையில் குறைவாக பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இந்த படம் ஆண்ட்ரியாவின் திறமையை வெளிப்படுத்தும் விதமாக அமையும். இவர் திரையுலகின் ஒரு முக்கியமான நடிகை எனவும் புகழ்ந்து கூறினார்.

No comments:

Post a Comment