காதல் மன்னன்’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகத்திற்கு இசையமைப்பாளராக அறிமுகமானவர் பரத்வாஜ். ‘அமர்க்களம்‘, ‘ரோஜா வனம்‘, ‘பார்த்தேன் ரசித்தேன்’, ‘பாண்டவர் பூமி’, ‘ரோஜா கூட்டம்’, ‘ஜெமினி’, ‘அன்பே சிவம்’, ‘வசூல்ராஜா எம்.பி.பி.எஸ்.’ உள்ளிட்ட பல படங்களுக்கு இசையமைத்துள்ளார். கடைசியாக, ‘அசல்’ படத்திற்கு இசையமைத்தார். இதன்பிறகு சினிமாவில் இருந்து சற்று ஒதுங்கி இருந்தார்.
இந்நிலையில், இளையராஜா திருவாசகத்திற்கு இசையமைத்ததுபோல் பரத்வாஜ் திருக்குறளுக்கு இசையமைக்க முடிவு செய்து அதற்கான முயற்சிகளையும் செய்து வருகிறார். இதன்காரணமாக உலக முழுவதும் உள்ள தமிழறிஞர்களை சந்தித்துள்ளார்.
1330 குரளுக்கும் தனித்தனி ட்யூன்களை போட்டிருப்பது இந்த ஆல்பத்தின் சிறப்பு. அதுமட்டுமில்லாமல் ஒவ்வொரு குறளுக்கும் பிரபலமானவர்களை கொண்டு பொழிப்புரையும் சொல்ல வைத்திருக்கிறாராம். விரைவில் இந்த இசை ஆல்பம் மிகப்பெரிய வி.ஐ.பி. ஒருவரால் வெளியாவதற்கு தயாராகிக்கொண்டிருக்கிறது.
No comments:
Post a Comment