Monday, September 2, 2013

பண்ணையாரும் பத்மினியும் படத்தை விளம்பரப்படுத்த ’ரோடு ஷோ’

விஜய் சேதுபதி, ஜெயப்பிரகாஷ், சினேகா நடிக்கும் ‘பண்ணையாரும், பத்மினியும்’ படத்தை அருண்குமார் இயக்கி வருகிறார். பண்ணையார் ஒருவர் பியட் நிறுவனத்தின் பத்மினி மாடல் கார்கள் மீது கொண்ட மோகத்தினை மையமாக வைத்து காமெடி படமாக உருவாக்கி வருகிறார்.
இப்படத்தை விளம்பரப்படுத்தும் நோக்கமாக, படத்தில் வருவதுபோன்ற இரண்டு பத்மினி மாடல் கார்களை வைத்து ‘ரோடு ஷோ’ ஒன்றை நடத்த படக்குழு திட்டமிட்டிருக்கிறது ஒரு கார் நாகர்கோவிலில் இருந்தும், மற்றொரு கார் கோயம்புத்தூரிலிருந்தும் கிளம்பி சென்னைக்கு வரும்படி திட்டமிட்டிருக்கிறார்களாம்.
வரும் வழியில் எல்லாம் இந்த கார் பொதுமக்களிடம் பெரும் வரவேற்பை பெறும் என்று நம்புகின்றனர். சென்னை வரும் இருகார்களுக்கும் இப்படக்குழுவினர் சிறப்பான வரவேற்பு அளிக்கின்றனர். இப்படத்தை எம்.ஆர்.கணேஷ் தயாரிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment