Tuesday, September 3, 2013

நேமிசந்த் ஜபாக் தயாரிப்பில் ஆர்யா, விஜய்சேதுபதி மற்றும் கிருஷ்ணா

நான் அவனில்லை, அஞ்சாதே, பாண்டி போன்ற வெற்றிப் படங்களை தயாரித்த நிறுவனம் நேமிசந்த் ஜபாக். சமீபத்தில் சிம்பு, வரலட்சுமி நடித்த போடா போடி என்ற படத்தை தயாரித்து வெளியிட்டது. இந்த நிறுவனம் தற்போது இரண்டு படங்களை தயாரிக்கிறது.
ஒரு படத்தில் ஆர்யா கதாநாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக முன்னணி கதாநாயகி நடிப்பார் எனத் தெரிகிறது. இப்படத்தை மகிழ் திருமேனி இயக்க, படப்பிடிப்பு வரும் நவம்பர் மாதம் தொடங்கும் எனத்தெரிகிறது. ஸ்பெயின், இத்தாலி கோவா மற்றும் மும்பையில் படப்பிடிப்பை நடத்துகின்றனர். இப்படம் அடுத்த வருடம் மே மாதம் வெளியிட திட்டமிட்டுள்ளது.
இன்னொரு படத்தில் விஜய் சேதுபதி மற்றும் கழுகு படத்தில் நடித்த கிருஷ்ணா ஆகியோர் நடிக்கின்றனர். இப்படத்தை ஜெய் கிருஷ்ணா இயக்குகிறார். இப்படத்திற்கு வன்மம் என பெயரிட்டுள்ளனர். ரகுநந்தன் இசையமைக்கிறார்.


No comments:

Post a Comment