Tuesday, July 30, 2013

சிம்பு கூடவா நடிக்கப் போறீங்க: ஹன்சிகாவை எச்சரித்த \

 
 
சென்னை: சிம்பு படத்தில் நடிக்கும் முன்பு ஹன்சிகாவை சிலர் எச்சரித்துள்ளனர். ஹன்சிகா வாலு படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகும் முன்பு அவரிடம் சிம்புவை பற்றி சிலர் எச்சரித்துள்ளார்களாம். 
 
ஷூட்டிங் துவங்கிய பிறகு கெமிஸ்ட்ரி கெமிஸ்ட்ரி என்று சொல்கிறார்களே அது ஒர்க் அவுட் ஆக வேண்டும் என்பதற்காக படக்குழுவினர் சிம்புவை பற்றி ஹன்சிகாவிடம் ஆஹா, ஓஹோ என்று பேசியுள்ளார்களாம். இதை கேட்டு ஹன்சிகா சிம்புவிடம் மனதை பறிகொடுத்துவிட்டாராம்.
 
 வழக்கமான காதல் ஜோடிகள் போன்று அவர்களும் நாங்கள் காதலர்கள் இல்லை நண்பர்கள் தான் என்று கூறி வந்தனர். இந்நிலையில் அவர்கள் என்ன நினைத்தார்களோ தெரியவில்லை திடீர் என்று ஒரு சுபயோக சுபதினத்தில் ஆமாம் நாங்கள் காதலிக்கிறோம், திருமணமும் செய்துகொள்ளப் போகிறோம் என்று அறிவித்தனர். 
 
திருமணம் செய்து கொண்டு அஜீத், ஷாலினி போன்று வாழப் போகிறார்களாம்.

No comments:

Post a Comment