Wednesday, July 31, 2013

நெக்ஸ்ட் ஒருவருஷம் ரெஸ்ட்… அஜீத் அதிரடி


படத்தோட பேரு என்று ஒருவருடம் பேச வைத்தவர் அஜீத், இதோ ஆரம்பம் என்று அறிவித்தாகிவிட்டது. படப்பிடிப்பிற்காக ஓடிக்கொண்டே இருந்ததில் கால்வலி கவனிக்க கூட நேரமில்லை. இப்போது பிரச்சினை தீவிரமடைந்துள்ளதால் ஒரு ஆண்டுக்கு ஓய்வெடுக்கப் போவதாக அறிவித்துள்ளார் அஜீத். 
ஆரம்பம் படப்பிடிப்பில் சின்னச் சின்னதாக ஆக்ஸிடென்ட் வேறு அஜீத்தை அசத்திவிட்டது. 
விஷ்ணுவர்த்தன் இயக்கத்தில் ஆரம்பம், சிறுத்தை சிவா இயக்கத்தில் பரபரப்பாக சுவிட்சர்லாந்து பயணம் என கடந்த பல மாதங்களாகவே பயங்கர பிஸி. எனவே ஷாலினி, மகளின் கோரிக்கையை ஏற்று ஒரு ஆண்டுக்கு ஓய்வெடுத்து கால்வலி பிரச்சினையை சரிசெய்யப் போவதாக கூறியுள்ளார். வார இதழ் ஒன்றிர்கு அவர் அளித்த பேட்டியில் இதனைத் தெரிவித்துள்ளார்.
சிறுத்தை சிவாவின் படத்திற்காக சுவிட்சர்லாந்து பயணம் முடித்துவிட்டு இப்போதுதான் சென்னை திரும்பியிருக்கிறார். வெயில் மட்டுமல்ல பனியும் கூட நிறத்தை மாற்றிவிடும் லேசாக கறுத்துப் போயிட்டேன்ல. சென்னை வந்துட்டேன்ல இனி கலர் வந்திடும் என்று கூலாக சொன்னார் அஜீத்.
ஆரம்பம்' படத்தின் வேலைகள் முழுவதும் முடிந்து விட்டது. விரைவில் ரிலீஸ் பற்றிய அறிவிப்பு வரும்.

நாகிரெட்டி தயாரிக்க சிறுத்தை சிவா இயக்கும் படமும் கிட்டத்தட்ட முக்கால்வாசி முடிந்து விட்டது. பொங்கலுக்கு ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

 
இந்த படங்களுக்குப் பின்னர் ஒரு வருடத்திற்கு ரெஸ்ட்தான். கால்வலி பிரச்சினையை சரி செய்யணுமே!. ஒன்றரை வருடமா அந்த வலியோடவே நடமாடிட்டு இருக்கேன்.

 

No comments:

Post a Comment