சென்னை: ரஜினிகாந்த் தனது வீட்டில் உள்ள திரையரங்கில் மருமகன் தனுஷ்
நடித்த மரியான் படத்தை பார்த்துள்ளார்.
படங்களை விளம்பரப்படுத்த விரும்புவோர் அதை ரஜினிகாந்துக்கு போட்டு காட்டி
சூப்பர் ஸ்டார் எங்கள் படத்தை பார்த்துவிட்டு பாராட்டியுள்ளார் என்று
அறிவித்துவிடுவார்கள்.
அடடா ரஜினி பாராட்டியுள்ளாராமே என்று அந்த
படத்திற்கு மவுசு அதிகரித்துவிடும். இப்படி பலர் தங்களின் படங்களை
விளம்பரப்படுத்துவதை பார்த்த ரஜினி படம் பார்ப்பதை தவிர்த்தார்.
ரஜினி தான் குடியிருக்கும் வீட்டுக்கு பின்புறம் உள்ள வீட்டை வாங்கி அங்கு
க்யூப் தொழில்நுட்பத்துடன் கூடிய திரையரங்கு ஒன்றை வடிவமைத்துள்ளார்.
இந்நிலையில் அவர் ரவிச்சந்திரனை அழைத்து நீங்கள் தயாரித்த மரியான் படத்தை
கொஞ்சம் போட்டுக் காட்டுங்களேன் என்று கூறியுள்ளார்.
ரஜினியே கேட்டுவிட்டார் என்று மரியான் பிரிண்ட் ஒன்றை ரவிச்சந்திரன்
அனுப்பி வைத்துள்ளார். அதை தனது க்யூப் தொழில்நுட்ப திரையரங்கில் போட்டு
பார்த்து ரசித்துள்ளார் ரஜினி.
மரியான் படத்தில் ஹீரோவாக நடித்துள்ளது ரஜினியின் மாப்பிள்ளை தனுஷ்,
இசையமைத்துள்ளதோ கோச்சடையான் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் என்பது
குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment