Monday, July 29, 2013

அமெரிக்கா: இந்திய சுதந்திர தின விழாப் பேரணிக்கு ஹசாரே, வித்யா பாலனுக்கு அழைப்பு



அமெரிக்காவின் நியூயார்க், நியூஜெர்சி பகுதியில் இந்திய சங்கங்களின் கூட்டமைப்பு கடந்த 43 வருடங்களாக இயங்கிவருகின்றது. இந்த அமைப்பின் சார்பில் இந்தியாவின் சுதந்திர தின விழாப் பேரணிகளும், கொண்டாட்டங்களும் அமெரிக்காவிலும் ஆண்டுதோறும் கொண்டாடப்படுகின்றன.
இந்த வருட சுதந்திர தின விழாப் பேரணி மன்ஹாட்டனில் வரும் 18 ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது வெளியில்பெரிய அளவில் நடைபெறும் பேரணி இதுவாகும். மேலும், இந்த நிகழ்ச்சி, இந்த அமைப்பினர் நடத்தும் 33ஆவது ஆண்டு விழா நிகழ்ச்சியாகும். இந்நிகழ்ச்சியில் பங்கு கொள்ள ஊழலை எதிர்த்துப் போராடும் அன்னா ஹசாரேவும், இந்தி நடிகை வித்யா பாலனும் சிறப்பு விருந்தினர்களாக அழைக்கப்பட்டுள்ளனர்.
இவர்களுடன் இந்தியாவின் முன்னாள் ராணுவத்தலைமை அதிகாரியான வி.கே.சிங்கும், ஆன்டிகுவா, பார்படா நாட்டின் பிரதமர் பால்ட்வின் ஸ்பென்சரும் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொள்கின்றனர் என்று இந்த அமைப்பின் தலைவர் சஞ்சய் அமின் தெரிவித்தார். இவர்கள் தவிர, தமிழ்த் திரைப்படநடிகரும், தென்னிந்திய திரைப்பட சங்கத்தின் தலைவரும், தமிழக சட்டசபை உறுப்பினரும் ஆன சரத்குமார் அவரது மனைவி நடிகை ராதிகா சரத்குமார் ஆகிய இருவரும் பேரணியில் தலைவர்களாகப் பங்கேற்பார்கள் என்றும் அவர் கூறினார்.
இந்தியாவின் பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் வகையில், மன்ஹாட்டனின் அணிவகுப்புப் பாதை அருகே 10அடிக்கு 80 அடி அளவில் டெல்லி செங்கோட்டையின் மாதிரி ஒன்று நிறுவப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment