மாதவன் ஆங்கில படத்தில் நடிக்கிறார். 1968–ல் வெளியான நைட்ஆப் லிவ்விங்டெட் என்ற ஹாலிவுட் படம் 3டியில் ரீமேக் ஆகிறது. இதில் டேனியல் ஹாரிஸ், டாம்ஸைஸ்மோர், டானிடாட், சுலோனா டால், ஷாராஹெபில் போன்ற முன்னணி ஹாலிவுட் நடிகர்கள் கதாநாயகர்களாக நடிக்கின்றனர்.
இவர்களுடன் மாதவனும் ஒரு கதாநாயகனாக நடிக்கிறார். ஜமிதியா டிசோட்டோ இயக்குகிறார். திகில் படமாக உருவாகிறது. இதில் நடிப்பது குறித்து மாதவன் கூறும்போது, நைட் ஆப் லிவ்விங்டெட் ஹாலிவுட் படத்தின் 3 டி ரீமேக்கில் நடிப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது.
ஹாலிவுட்டில் பெரிய ஹிட் படங்கள் எடுத்த கம்பெனி இப்படத்தை தயாரிக்கிறது. என்னை இந்த படத்தில் நடிக்க தேர்வு செய்ததை பெருமையாக கருகிறேன் என்றார்.
No comments:
Post a Comment