Friday, August 2, 2013

3 மொழிகளில் சலீம்


இசை அமைப்பாளர் விஜய் ஆண்டனி நான் படத்துக்கு பிறகு தற்போது நடித்து வரும் படம் சலீம். நிர்மல்குமார் என்ற புதுமுக இயக்குனர் இயக்குகிறார். விஜய் ஆண்டனிக்கு ஜோடியா நடிக்க சில முன்னணி ஹீரோக்களுடன் பேச்சுவார்த்தை நடந்தது.
யாரும் நடிக்க முன்வரவில்லை. அதனால் தெலுங்கில் அறிமுகமாகி வளர்ந்து வரும் அக்ஷா என்ற நடிகையை அழைத்து வந்து நடிக்க வைக்கிறார்கள்.
இதுவரை 50 சதவிகித படப்பிடிப்புகள் முடிந்து விட்டது. படத்தை தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று மொழிகளில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருக்கிறார்கள். “ஹீரோயினா நடிக்க சில டாப் ஹீரோயின்களுடன் பேச்சு நடந்தது உண்மை. கால்ஷீட் பிரச்சினையால் யாரும் நடிக்கவில்லை. அவர்கள் நேரம் வரை காத்திருக்க எங்களால் முடியவில்லை.
அதனால் அக்ஷா நடிக்கிறார். கதை இந்தியா முழுமைக்கும் பொதுவானது என்பதால் நண்பர்கள் மூன்று மொழிகளில் வெளியிடலாம் என்று யோசனை சொன்னார்கள். அதற்கான பணிகளும் நடந்து வருகிறது” என்கிறார் இயக்குனர் நிர்மல் குமார்.

No comments:

Post a Comment