ராணாவுக்கு பிறகு ஏற்பட்ட உடல்நலக்குறைவால் சிங்கப்பூரில் சிகிச்சை பெற்று திரும்பிய ரஜினி, பல மாதங்களாக போயஸ் கார்டன் வீட்டிலேயே ஓய்வெடுத்து வந்தார். அப்போது திரையுலகிற்கும் அவருக்குமிடையே இடைவெளி அதிகமானது போல் ரஜினி பீல் பண்ணினாராம். அதனால், அவ்வப்போது வெளியாகும் படங்களை அவர் உடனுக்குடன் பார்த்து ரசிக்க வேண்டும் என்பதற்காகவே அவரது வீட்டை ஒட்டியிருந்த இடத்தில் ஒரு க்யூப் தியேட்டரை உருவாக்கினார்கள்.
அதனால், சில படங்களைப்பார்ப்பதற்காக பிரிவியூ தியேட்டர்களுக்கு வந்து சென்று கொண்டிருந்த ரஜினி, அதையடுத்து வெளியில் வருவதை நிறுத்தி விட்டு, தனது வீட்டு தியேட்டரிலேயே படங்களை பார்க்கத் தொடங்கினார். வேண்டப்பட்டவர்கள் படம் பார்க்க அழைத்தால்கூட பிரிண்டை கொடுங்கள் நான் வீட்டிலேயே பார்த்துக்கொள்கிறேன் என்று கூறி விடுகிறார்.
கோச்சடையானில் நடித்த பிறகு இப்போது அந்த தியேட்டரில்தான் பெரும்பகுதி நேரத்தை செலவிட்ட வரும் ரஜினி, சமீபத்தில் தனது மருமகன் தனுஷ் நடிப்பில் வெளியான மரியான் படத்தையும் பார்த்து ரசித்திருக்கிறார். முன்பை விட தனுஷின் நடிப்பில் தெரிந்த முதிர்ச்சியை கண்டு வியந்த ரஜினி, உடனடியாக அவருக்கு போன் போட்டு தனது மகிழ்ச்சியை தெரிவித்திருக்கிறார்.
No comments:
Post a Comment