Thursday, August 1, 2013

ஒரு பாடலுக்கு 5 இசையமைப்பாளர்கள்! யுவனின் ஸ்பெஷல் பிரியாணி சாங்



தன்னுடைய 100வது படம் என்பதால், பிரியாணி படத்தில் பல்வேறு ஆச்சரியங்களை தந்து கொண்டு இருக்கிறார் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா. கார்த்தி, ஹன்சிகா ஜோடியாக நடித்துள்ள பிரியாணி படத்தை வெங்கட்பிரபு இயக்கியுள்ளார். ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படத்தில் கவிஞர் வாலி எழுதிய பாடலை கார்த்தியும், பிரேம்ஜியும் பாடியுள்ளனர். கூடுதலாக வெங்கட்பிரபுவும் ஜதி சொல்லியிருக்கிறார்.
இதுதவிர, இந்த படத்தில் 4 இசையமைப்பாளர்கள்(யுவனையும் சேர்த்து 5பேர்) இணைந்து யுவனின் இசையில் ஒரு பாடலை பாடியுள்ளனர். ஜி.வி. பிரகாஷ், விஜய் ஆண்டனி, டி. இமான், எஸ்.எஸ். தமன் ஆகிய 4 இசையமைப்பாளர்களும் இணைந்து யுவனின் இசையில் ஒரு பாடலை பாடியுள்ளனர்.
இதனால், ரசிகர்கள் ஏக எதிர்பார்ப்புடன் பாடலை கேட்க காத்துக் கொண்டு இருக்கின்றனர். மேலும், தன்னுடைய 100வது படம் என்பதால், பிரியாணியின் ஆடியோ ரிலீசுக்கு ஏ.ஆர். ரஹ்மானை அழைக்க திட்டமிட்டுள்ளார் யுவன்.பிரியாணி படத்தின் வேலைகள் பெரும்பாலும் முடித்து விட்ட நிலையில், ஆகஸ்ட் 10ம் தேதி பாடல் வெளியீட்டு விழாவும், செம்டம்பர் 6ம் தேதி படத்தையும் வெளியிட படக் குழுவினர் முடிவு செய்துள்ளனர்.

No comments:

Post a Comment