இந்தியில் தனுஷ் நடித்த, “ராஞ்சனா படம் இந்தியா மட்டுமின்றி, அமெரிக்காவிலும் சில திரையரங்குகளில் ரிலீசானது.
ஒரேயொரு இந்தி படத்தில் நடித்ததின் மூலம், தனுஷின் வியாபார வட்டம் பரந்து, விரிந்து விட்டது. அதே படம் தமிழில், “அம்பிகாபதி என்ற பெயரில், “டப் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. ஒரு சில நாட்களிலேயே, பெரும்பாலான தியேட்டர்களில் அந்த படத்தை தூக்கி விட்டனர்.
அதேபோல், நேரடி தமிழ்ப்படமான, “மரியானும் தனுஷûக்கு பெரிய வெற்றியை கொடுக்கவில்லை. அதனால், தனக்கு வெற்றி வாய்ப்பை கொடுத்த, இந்தி சினிமாவின் மீது தனுஷûக்கு, கூடுதல் ஆர்வம் ஏற்பட்டுள்ளது. தற்போது, தீவிரமாக இந்தியும் பயின்று வருகிறாராம்.
No comments:
Post a Comment