இயக்குநர் கஸ்தூரி ராஜாவின் வாரிசாக அவரது ‘‘துள்ளுவதோ இளமை’’ படம் மூலம் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானவர் நடிகர் தனுஷ். தொடர்ந்து தனது அண்ணனின் காதல் கொண்டேன், புதுப்பேட்டை போன்ற படத்தில் நடித்து பாராட்டு பெற்றார்.
ஆரம்பத்தில் சுள்ளானாக இருந்து, திருடா திருடியில் மன்மத ராசா ஆட்டம் ஆடி ரசிகர்களை கவர்ந்த தனுஷ், பொல்லாதவர்களுக்கு பொல்லாதவனாகவும், எல்லோருக்கும் உத்தமபுத்திரனாகவும், ரஜினிக்கு மாப்பிள்ளையாகவும் மாறினார்.
சமீபத்தில் கொலவெறி பாட்டு பாடி, ஆட்டம் ஆடி உலகம் முழுக்க பிரபலமாகியும் இந்தியிலும் முத்திரை பதித்து, முதல்படத்திலேயே ரூ.100 கோடி பாக்ஸ் ஆபிஸ் ஹிட்டில் சேர்ந்து பெருமை சேர்த்து கடல் ராசாவாக வலம் வந்து கொண்டு இருக்கிறார். அந்த கடல் ராசாவுக்கு இன்று(ஜூன் 28ம் தேதி) தனது 30வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இந்த வருடம் தனது பிறந்தநாளை இங்கு கொண்டாடவில்லை. மாறாக லண்டனில் தனது குடும்பத்தாருடன் கொண்டாடுகிறார்.
No comments:
Post a Comment