Sunday, July 28, 2013

ஒரே படத்துக்கு ஆயிரம் தயாரிப்பாளர்கள்



பார்ட்னர்கள் சேர்ந்து படம் தயாரித்த காலம்மாறி இப்போது டிரேட் யூனியன்களே படம் தயாரிக்க ஆரம்பித்து விட்டார்கள். அப்படி வரப்போகும் முதல் படம் முயல். தமிழ்நாடு போட்டோகிராபர்கள், வீடியோகிராபர்கள் சங்கம் தன் உறுப்பினர்களிடம் பணம் வசூலித்து இந்தப் படத்தை தயாரிக்கிறது.
அப்படிப் பார்த்தால் இந்தப் படத்துக்கு ஆயிரம் தயாரிப்பாளர்கள். இன்னொரு சிறப்பு அம்சம் என்னவென்றால் படத்தை இயக்கும் எஸ்.பி.எஸ்.குகன் உள்பட முக்கிய கேரக்டரில் நடித்திருப்பவர்கள் அத்தனை பேருமே வீடியோகிராபர்கள், அல்லது போட்டோகிராபர்கள், யோகன், பிரபு, ராஜ்குமார் என மூன்று ஹீரோ, சரண்யா நாக், தர்ஷணா, ஆராதிகா ஆகியோர் ஹீரோயின்கள். இந்தப் படத்தின் ஆடியோ ரிலீஸ் ஆர்கேவி ஸ்டூடியோவில் நடந்தது. சங்கத்தின் மாநில நிர்வாகிகள் உள்பட எல்லா ஏரியாவிலிருந்தும் போட்டோ, வீடியோ கிராபர்கள் குடும்பத்தோடு வந்து குவிந்தார்கள்.
“3 ஹீரோவும், 3 ஹீரோயினும் சேர்ந்து புதுசா ஒரு பிசினஸ் ஆரம்பிக்கிறாங்க. அந்த பிசினசுக்கு ஒரு பெரிய பிரச்னை வருது. அது மாதிரி பிரச்னை யாருக்கும் வரக்கூடாதுன்னு 6 பேரும் சேர்ந்த போராடுறதுதான் படத்தின் ஒன்லைன்” என்கிறார் இயக்குனர் எஸ்.பி.எஸ்.குகன்.

No comments:

Post a Comment