நடிகை த்ரிஷா நாய்க்குட்டிகள் மீது அலாதி ப்ரியம் கொண்டவர். பெரும்பாலான நடிகைகள் வெளிநாடுகளில் இருந்து கொண்டு வரப்படும் நாய்களை தங்கள் வீடுகளில் வளர்த்து வருகின்றனர். ஆனால், த்ரிஷாவோ நம்ம ஊரில் உள்ள நாய்களையே வளர்த்து வருகிறார். அதோடு, தெருவில் எங்காவது நாய்கள் அனாதைகளாக திரிந்தால் அவற்றை பிராணிகள் நல வாரியத்திடம் ஒப்படைப்பார். அவருக்கு சிகிச்சையும் கொடுப்பார்.
மேலும், பிராணிகள் நல வாரியத்துக்கு நிறைய நன்கொடைகளும் வழங்கி வருகிறார். இதனால், த்ரிஷாவை நல வாரியத்தின் தூதுவராக நியமித்துள்ளனர். முன்பெல்லாம் படப்பிடிப்பில் பிசியாக இருந்ததால் எப்போதாவது ஓய்வு கிடைக்கும்போதுதான் பிராணிகள் நல வாரியத்துக்கு விசிட் அடிப்பார் த்ரிஷா. ஆனால், இப்போது படவாய்ப்புகள் குறைந்து விட்டதால், அடிக்கடி அங்கு செல்கிறாராம்.
இந்த நிலையில், தனது வீட்டில் வளர்த்து வந்த 25க்கும் மேற்பட்ட நாய்க்குட்டிகளை தத்து கொடுக்கும் முகாம் ஒன்றை கடந்த சில தினங்களுக்கு முன்பு நடத்தினார் த்ரிஷா. அப்போது, த்ரிஷாவினால் வளர்க்கப்பட்ட நாய்கள் என்பதோடு அவரது கையினாலேயே வாங்குகிறோம் என்பதால் பலர் போட்டி போட்டு அவரிடமிருந்து நாய்களை தத்து எடுத்து சென்றனர். அந்த நாய்கள் ஒவ்வொன்றுக்கும் த்ரிஷாவையே பெயர் வைக்கும்படியும் சிலர் கேட்டுக்கொண்டார்கள்.
No comments:
Post a Comment