Sunday, July 28, 2013

தனுசுடன் மோதுகிறார் ராஜ்கிரண்!




தனுஷ் நடித்த பொல்லாதவன், ஆடுகளம் படங்களை இயக்கியவர் வெற்றிமாறன். அதையடுத்து, வடசென்னை என்றொரு கதையை ரெடி பண்ணிக்கொண்டு சிம்புவை நாடினார். ஆனால், இன்றுவரை அதன் படப்பிடிப்பு தொடங்கவேயில்லை. அதனால் சில ஆண்டுகளுக்குப்பிறகு மீண்டும் தனுஷிடமே வந்துள்ள அவர், அடுத்து வேங்கை சாமி என்றொரு படத்தை இயக்குகிறார்.
இந்த படத்தில் தனுஷ் நாயகன் என்றால் அவருடன் அதிரடியாக மோதும் வில்லன் கதாபாத்திரத்தில் ராஜ்கிரண் நடிக்கிறார். ஹீரோவாக நடித்த பிறகு மாறுபட்ட கதாபாத்திரங்களில் நடித்து வரும ராஜ்கிரணுக்கு இந்த படத்தில் வில்லன் வேடம் என்றாலும் கதைக்கு அதி முக்கியத்துவம் வாய்ந்த வேடமாம். அதனால்தான் தன்னை வில்லனாக மாற்றிய போதும் கேரக்டரின் தன்மையை உணர்ந்து ஓ.கே சொன்னாராம் ராஜ்கிரண்.
ஆக, வேங்கை படத்தில் தனுஷின் பாசமிக அப்பாவாக நடித்த ராஜ்கிரண், இப்போது அவருடன் பயங்கரமாக மோதும் வில்லனாக நடிக்கிறார்.

No comments:

Post a Comment