காதலில் விழுந்தேன் படத்தில் அறிமுகமானவர் சுனைனா. அதன்பிறகு மாசிலாமணி உள்பட சில படங்களில் நடித்தபோதும் அவரது மார்க்கெட் சூடுபிடிக்கவில்லை. ஆனால் வம்சம், நீர்ப்பறவை, திருத்தணி படங்களுக்குப்பிறகு சுனைனாவின் நடிப்பு பேசப்பட்டது. ஆனபோதும், அந்த படங்கள் பெரிய ஹிட் கொடுக்காததால் இப்போதும் ராசியில்லாத நடிகை என்ற பட்டியலில்தான் இருக்கிறார் சுனைனா.
ஆனால், இதை உடைக்க வேண்டும் என்பதற்காகத்தான் பாண்டி ஒலி பெருக்கி நிலையம் படத்தில் பிகினி நடிகையானார். ஆனால், அந்த படமும் கவிழ்த்து விட்டது. அதனால் இப்போது ஸ்ரீகாந்துடன் நம்பியார் படத்தில் நடித்து வரும் சுனைனா, இந்த படத்தில் முதன்முறையாக காமெடி நாயகியாக நடிப்பதால், இந்த ரூட்டாவது தன்னை காப்பாற்றுமா என்று பலத்த யோசனையுடன் நடித்து வருகிறார்.
அதேசமயம் கவர்ச்சியையும் விடுவதாக இல்லையாம் அவர். கோலிவுட்டிலுள்ள சில படாதிபதிகளை அடிக்கடி சந்தித்து கிளாமர் நடிகையாகவும் உருவெடுக்கவும் தயாராகி விட்டேன். பரத்துடன் திருத்தணியில் ஆடியதை விடவும் அதிரடி குத்தாட்டம் போடவும் ரெடியாக இருக்கிறேன் என்றும் சொல்லி கவர்ச்சி வாய்ப்பு கேட்டு வருகிறார் சுனைனா.
காஜல்அகர்வால், தமன்னா போன்ற நடிகைகளை விட கவர்ச்சியில் எந்தவிதத்திலும் சுனைனா சளைத்தவர் அல்ல என்று நினைத்தாலும், அவரை விடாது துரத்தும் தோல்வியை கருத்தில் கொண்டு புக் பண்ண தயங்கி நிற்கின்றனர் படாதிபதிகள்
No comments:
Post a Comment