மதராசப்பட்டணத்தில் விஜய் இயக்கத்தில் நடித்த ஆர்யா மீண்டும் அவரது இயக்கத்தில் நடிக்கிறார்.
ஏ.எல்.விஜய் பல ஹிட்கள் தந்தாலும் தெய்வத்திருமகளா? ஐ யம் சாம், மதராசப்பட்டணமா? டைட்டானிக் தொடங்கி பல படங்கள் என்று வெளிநாட்டுப் படங்களுடன் ஒப்பிட்டே பேசுகிறார்கள். அதனை உடைக்க அவர் அடுத்து எடுக்கும் படம், சைவம்.
தெய்வத்திருமகளில் நடித்த பேபி சாரா முக்கிய வேடத்தில் நடிக்கும் இந்தப் படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். சின்ன வேடம் ஒன்றில் ஆர்யாவும் நடிக்கிறார். விருதை குறி வைத்து எடுக்கப்படும் மினிமம் பட்ஜெட் படம் என்பதாலும், படத்தில் இடம்பெறுகிறவர்கள் விஜய்யின் நலம்விரும்பிகள் ஆனதாலும் சம்பளம் வாங்காமல் பணியாற்றுகிறார்களாம்.
விஜய் என்றால் வெற்றி என்றுதான் இதுவரை சொல்லி வந்தார்கள். விஜய் என்றால் விருது என்று சொல்ல வைக்க வேண்டும். ஏ.எல்.விஜய்க்கு நமது அட்வான்ஸ் வாழ்த்துகள்.
No comments:
Post a Comment