நடிகை தமன்னா தெலுங்கில் பிசியாக நடிக்கிறார். ஐதராபாத்தில் அவர் அளித்த பேட்டி வருமாறு:–
நான் ஓய்வில்லாமல் நடிக்கிறேன். இந்த வருடம் மட்டும் நான் நடித்து 4, 5 படங்கள் வருகின்றன. கைவசம் நிறைய படங்கள் உள்ளன. தமிழிலும் பட மொன்று வந்துள்ளது. நீண்ட இடை வெளிக்கு பிறகு மீண்டும் தமிழ் படத்தில் நடிக்கிறேன். இந்திப்படத்திலும் நடிக்கிறேன்.
நான் நடித்த படங்கள் எல்லாமே கமர்ஷியல் படங்கள். கலை படங்களில் நடிக்க மாட்டீர்களா என்று கேட்கிறீர்கள். அது போன்ற படங்கள் இதுவரை அமைய வில்லை. நல்ல கதைகள் வந்தால் நடிப்பேன்.
சினிமா என்பது ரசிகர்களுக்கானது. அவர்களுக்கு பிடித்த படங்களில் நடிப்பது முக்கியம் கமர்ஷியல் படங்களை தான் ரசிகர்கள் அதிகம் விரும்புகிறார்கள். எனவே கமர்சியல் படங்களுக்கு முக்கியத்துவம் அளிப்பேன். இது போன்ற படங்களில் கலைப்படங்களை போல் நடிப்புத் திறமையை வெளிப்படுத்த வாய்ப்புகள் இருக்காது. அதை பொருட்படுத்தவில்லை. ரசிகர்களுக்கு பிடித்த படங்களில் கொஞ்ச நேரம் நடித்தாலே போதுமானது.
படங்களில் கதாநாயகிகளை விட கதாநாயகர்களுக்கே முக்கியத்துவம் அளிக்கின்றனர். கதாநாயகிகளும் முக்கியம்தான் அவர்களும் திறமையாகத்தான் நடிக்கிறார்கள். நடிகைகளுக்கும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.
இவ்வாறு தமன்னா கூறினார்.
No comments:
Post a Comment