கௌதம் வாசுதேவ மேனன் இயக்கத்தில் சூர்யா நடிப்பதாகச் சொல்லப்பட்ட துருவநட்சத்திரம் இன்னும் தொடங்கப்படாமல் உள்ளது. படம் கைவிடப்பட்டதாக தகவல். இல்லை, ஸ்கிரிப்டில் கௌதம் வேலை பார்த்து வருகிறார் அதனால்தான் தாமதம் எனவும் கூறுகிறார்கள்.
இந்நிலையில் படம் ஏன் தாமதம் என்பதற்கு சூர்யா விளக்கமளித்திருக்கிறார்.
சிங்கம் 2 வுக்குப் பிறகு இரண்டு படங்கள் நடிக்கிறேன். கௌதம் படம் தாமதமாவதற்கு தொழில்நுட்பப் பிரச்சனைதான் காரணம், டெக்னிக்கலாக சில விஷயங்கள் தேவைப்படுகிறது என்று தெரிவித்துள்ளார். விரைவில் லிங்குசாமி படத்தில் நடிக்கயிருப்பதாகவும் கூறியிருக்கிறார்.
ஆக, கௌதம் படம் இன்னும் ட்ராப் ஆகவில்லை, லைவ்வில்தான் இருக்கிறது.
No comments:
Post a Comment