Wednesday, August 7, 2013

மூன்றாவது முறையாகவும் சிம்புவுக்கு ஜோடியாகிறார் ஹன்சிகா?


 சிம்பு நடித்து வரும் வாலு, வேட்டை மன்னன் என இரண்டு படங்களில் நாயகியாக நடித்து வருகிறார் ஹன்சிகா. இதனால் ஏற்பட்ட நெருக்கம் காரணமாக அவர்களுக்கிடையே காதல் தீ பத்திக்கொண்டதாக சில மாதங்களாக செய்திகள் கசிந்து வந்தன. அந்த செய்தி சமீபத்தில் உறுதியானது. நாங்கள் காதலிக்கிறோம் என இருவரும் ஒப்புக்கொண்டனர்.
இந்தநிலையில், தற்போது பாண்டிராஜ் இயக்கத்தில் சிம்பு நடிக்கவிருக்கும் படத்திற்கு சில மாதங்களாவே கதாநாயகி தேடி வருகிறார்கள். ஆனால், தென்னிந்தியா, வடஇந்தியா என சல்லடை போட்டும் கதைக்கேற்ற கதாநாயகி சிக்கவில்லையாம். அதனால், எதற்கு கையில் வெண்ணெயை வைத்துக்கொண்டு ஊர் ஊராக அலைய வேண்டும், ஹன்சிகாவையே இந்த படத்திலும் நடிக்க வைத்து விடுவோம் என்று பாண்டிராஜிடம் கருத்து கூறியிருக்கிறாராம் சிம்பு.
ஆனால், பாண்டிராஜ்க்குத்தான் அதில் உடன்பாடில்லையாம். இருப்பினும், சிம்பு தொடர்ந்து தனது கருத்தை திணித்து வருவதால், வேறு வழியில்லாமல் அவரும் சம்மதித்து விடுவார் என்கிறார்கள். அப்படி பாண்டிராஜ் சம்மதம் தெரிவித்தால், சிம்பு-ஹன்சிகா ஜோடிக்கு இது மூன்றாவது படமாகி விடும்

No comments:

Post a Comment